
Dont switch on car ac immediately
நம் அனைவர்க்கும் பொதுவாக இருக்கும் ஒருபழக்கம்தான் காரில் ஏறியதும் AC யை ஆன் செய்வது. இது எவளோ பெரிய தவறு தெரியுமா?
காரில் பயணம் செய்யும் போது, நீண்ட தூர பயணத்தின்போதும் நாம் காரில் ஏறியதும் காரின் AC யை உடனே ஆன் செய்துவிடுவோம். இது மிகவும் தவறு.
AC காரில் ஏறியதும் உடனே அச யை ஆன் செய்யாமல் முதலில் காரின் ஜன்னல்களை நன்கு திறந்துவிட வேண்டும். அதன்பின்பு சிறிது நேரம் கழித்து AC யை ஆன் செய்யலாம்.
ஏன் உடனே AC ஆன் செய்ய கூடாது தெரியுமா..?
பொதுவாக காரினுள் இருக்கும் டாஷ்போர்டு, இருக்கைகள், இதர பாகங்கள் பிளாட்டிக்கினால் ஆனது. இவைகள் அனைத்தும் பென்சீன் என்னும் ஒருவித நச்சுத்தன்மையை உமிழ்கின்றன. இது கேன்சரை உருவாகும் சக்தி கொண்டது.
சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம். மட்டுமே ஆனால் வீடுகளில் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும்.
இதே போன்று வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரை இருக்கும். இது மோசமான கெடுதலை விளைவிக்கும்.
விளைவுகள் :
இதன் காரணமாக கேன்சர், லுக்கூமியா, சிறு நீரக பாதிப்பு போன்ற பல பதிப்புகள் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.எனவே காரை எடுக்கும் முன் சிறிது நேரம், காரின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டு பின்னர் பயன்படுத்துவது நல்லது.
Advertisement
Advertisement