காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா நீங்கள்..!! கட்டாயம் இத படிங்க..!

காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா நீங்கள்..!! கட்டாயம் இத படிங்க..!



do-you-drink-milk-on-an-empty-stomach-in-the-morning-mu

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஒரு டம்ளர் பால் குடிப்பீர்கள் என்றால் ஆயுர்வேதம் உங்களை கடுமையாக எச்சரிக்கிறது. 

ஆயுர்வேத மருத்துவத்தின்படி வெறும் வயிற்றில் பால் குடிப்பது உடலுக்கு நல்லதல்ல. ஏனெனில் வெறும் வயிற்றில் பால் குடிக்கும் போது அது உடலில் இருக்கும் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இது உடலுக்கும் தோலுக்கும் தீமை பயக்ககூடியது. இதனால் உங்கள் தோலின் பளபளப்பு தன்மை பாதிக்கப்படும்

நீங்கள் காலையில் எழுந்தவுடன் பால் குடிப்பதால் உங்கள் செரிமான மண்டலத்திற்கு ஆரம்பத்திலேயே அதிக வேலையை கொடுக்கிறீர்கள். அதன் பிறகு நீங்கள் காலை உணவை உன்னும் போது அதனை செரிப்பதற்காக உங்கள் செரிமான மண்டலத்திற்கு வேலை பலு அதிகரிக்கும். இதனால் வாயிற்று வலி, அல்சர் பிரச்சனை, அசிடிட்டி வாந்தி போன்றவை கூட ஏற்படலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தின் படி பார்த்தால் மாலை வேளையில் பால் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் பால் செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்தாலும் அது மிக எளிதில் செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுதான். மேலும் பால் குடித்த பின்பு நீங்கள் ஓய்வில் இருந்தாலும் அது உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். மேலும் நீங்கள் மாலையில் பால் அருந்தும் போது அது உங்களுடைய நரம்பு மண்டலத்துக்கும் மிகவும் நன்மையை செய்கிறது.