அச்சச்சோ.. இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீங்க..! உயிரை கொல்லும் விஷமாக மாறுமாம்..!!

அச்சச்சோ.. இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீங்க..! உயிரை கொல்லும் விஷமாக மாறுமாம்..!!


dO NOT EAT FOOD COOKED TOMMOROW

இரவு நேரங்களில் மீதப்படும் உணவுகளை மறுநாள் சாப்பிடுவது இன்றளவும் பல வீடுகளில் தொடர்கிறது. இது சமையல் வேலையை குறைப்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. பழைய உணவுகளை சூடுபடுத்தி உட்கொள்வதால், முன்பை விட சுவையாக இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.

சில உணவுப்பொருட்களை சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லதை விளைவிக்கதல்ல என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ஒரு முட்டை சில நிமிடங்களில் வெந்துவிடும். அதில் அனைத்து விதமான பாக்டீரியாவையும் நீக்குவதற்கான நேரம் தேவை. வேகவைத்த முட்டையை அரைவெப்பநிலையில் வைக்கும் போது அதில் சாலமோனால்லா என்ற பாக்டீரியா பெருகும். 

அதனால் முட்டையை சமைத்தவுடன் சாப்பிட வேண்டும். பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரிக் ஆக்சைடு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதனை மீண்டும் சூடுபடுத்தும் சமயத்தில் நைட்ரோ ஆக்சைடாக மாறி உடலுக்கு கேடு விளைவிக்கிறது. பீட்ரூட்டை தொடர்ந்து சூடுபடுத்தி சாப்பிட்டால் புற்றுநோய் உருவாகும் அபாயமும் ஏற்படும்.

உருளைக்கிழங்கை சமைத்தவுடன் எப்போதும் சாப்பிட்டுவிட வேண்டும். அது குளிர்ச்சியடையும் சமயத்தில் குளோரோஸ்டிரம் என்ற பாக்டீரியா பரவி உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சமைத்த கோழி இறைச்சியிலும், சாலமோனல்லா என்ற பாக்டீரியா வளரும். அதனால் இறைச்சியை நீண்ட நேரம் வைத்து சாப்பிடுவது நல்லதல்ல. எண்ணெயில் தயார் செய்யப்பட்ட பலகாரங்களை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. 

இதனால் பலகாரத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நீங்கும். கடல் சார்ந்த உணவுப் பொருட்களை சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிடுவது நல்லது. நேரம் கூட கடல் உணவின் விஷத்தன்மை அதிகரிக்கும். கீரை வகைகளில் நைட்ரேட் அதிகம் இருக்கும் என்பதால், அதனை அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. தேவையான அளவு சமைத்து சாப்பிட்டு காலிசெய்து மீண்டும் புதியதை செய்வது உடலுக்கு நல்லது.