அச்சச்சோ.. தினமும் குளித்தால் இவ்வளவு ஆபத்தா?.. சருமநோய் ஏற்படும் அபாயமும் இருக்காம்..!!
தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கு நல்லது என்று சிலர் ஒரு நாளைக்கு பலமுறை குளிப்பார்கள். ஆனால் அப்படி செய்வது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும், சருமத்திற்கு பாதுகாப்பானது இல்லை. ஏனெனில் உடலில் சென்சிடிவ் எனப்படும் அதிக உணர்வு கொண்ட பகுதிகள் உண்டு.
ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை அடிக்கடி குளிப்பதால் சருமசெல்கள் எளிதில் பாதிக்கப்படும். இதனால் வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும், ஒவ்வொரு முறையும் சோப் அல்லது க்ளென்சர் பயன்படுத்துவதும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். இது சருமநோய்க்கும் வழிவகுக்கும்.

நமது சருமத்தில் பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு இருக்கும். ஒரு நாளைக்கு பலமுறை குளிப்பதன் மூலம் அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அப்படி குளிக்கும்போதும் ஒரு முறை சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காகும்.
அதிக நேரம் குளிப்பதன் காரணமாகவே சிலருக்கு ஒவ்வாமை, நோய்தொற்று ஏற்படலாம். சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்ட்டி பாடிகளாக நமது உடலில் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் இருக்கும். அவை நீங்குவதால் பாக்டீரியா எதிர்ப்புசக்தி உடலில் இருந்து அகன்றுவிடும். எனவே அடிக்கடி குளிப்பதை தவிர்க்க வேண்டும்.