அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாமல் போனதற்கு முக்கிய காரணம் என்ன?.!
சென்னையில் உள்ள எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை முன்னாள் இயக்குனர் மருத்துவர் கிருஷ்ணகுமாரி, தாய்ப்பாலின் மகத்துவம் தொடர்பாக எடுத்துரைக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் சுந்தரி தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு மருத்துவர்கள் உரையாற்றினர்.
அவர்கள் கூறுகையில், "அன்றைய காலத்தில் ஒவ்வொரு பெண்களும் தங்களின் குழந்தைக்கு 3 வருடங்கள் முதல் 4 வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுத்து வந்தனர். ஆனால், இன்றளவில் 3 மாதம் கூட குழந்தைகளுக்கு பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது இல்லை. என்று நாம் குடும்ப உறவுகளை உதறித்தள்ளி தனிக்குடித்தனம் சென்றோமோ, அன்றே இந்த பிரச்சனை தொடங்கிவிட்டது.
தனிக்குடித்தனம் - தாய்ப்பாலுக்கு உள்ள சம்பந்தத்தை இன்றைய மருத்துவ கண்டுபிடிப்பு உணர்த்தி இருகிறது. குழந்தைகளுக்கு பாட்டில் மூடியை திறந்தோமா? ஆரோக்கியவோ, ஆவினோ, அமலாவோ பாக்கெட் பாலை காட்சி குழந்தைகளின் வாயில் ஊத்தினோமா என்று இருக்கின்றனர். அதுபோன்று செயல்படுவது குழந்தைகளின் உடல் நலத்திற்கு பெரும் கேட்டினை விளைவிக்கும்.
தாய்ப்பால் புகட்டுவதில் தாய்மார்களுக்கும் ஆர்வம், ஈடுபாடு வர வேண்டும். தாய்ப்பாலின் தாரக மந்திரமே Willing Mother and A Sucking Child என்பது தான். குழந்தை தாயிடம் இருந்து பாலை உறிஞ்சுவதற்கு பொதுவாக சிரமப்படும். புட்டியில் பால் அருந்தும் குழந்தை சிரமம் கொள்ளாது. அதனாலேயே ஒருமுறை புட்டிபால் கொடுத்தால், மீண்டும் அதனையே குழந்தைகள் விரும்புகிறது.

குழந்தைகளுக்கு இவ்வழியாக வரும் பாலில் நன்மை உள்ளது என்பது தெரியாது. Nipple Confusion என்று மருத்துவ முறையில் அதனை கூறுவார்கள். தாய்மார்களுக்கு குழந்தை பிறந்ததும் முதல் 3 நாட்கள் பால் நீர் போல வரும். அதுவே சீம்பால். அதனால் குழந்தைகளுக்கு பால் போதவில்லை என்று கூறி, அப்போதே புட்டிபால் கொடுக்கின்றனர். இது மிகப்பெரிய தவறு ஆகும்.
குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதுவே சிறந்தது. தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால், பால் மார்பகத்தில் கட்டி கிருமி தொற்று ஏற்படலாம். மீண்டும் பால் சுரப்பு ஏற்படாமல் நோய் முற்றவும் வாய்ப்புள்ளது. தாய் தனது குழந்தைக்கு பால் புகட்ட, தாயும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
இன்றளவில் பல்வேறு தாய்மார்களுக்கு ஆறு மாதத்திற்கு மேல் குழந்தைகளுக்கு பால் கொடுக்க இயலாமல் சென்றதற்கு காரணம் மன உளைச்சல், வேலைப்பளு மற்றும் தனிக்குடித்தனம்" என்று தெரிவித்தனர்.