தமிழகம் மருத்துவம்

தான் இறந்த பிறகும் 7 பேரின் உயிரை காப்பாற்றிய மருத்துவ கல்லூரி மாணவர்!!

Summary:

body parts donated karur silvaster

இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த கரூர் இளைஞரின் உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் அஜய் சில்வஸ்டர். மருத்துவ கல்லூரி மாணவரான இவர் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்த பொழுது விபத்துக்குள்ளானார். 

 இதனால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்திருக்கிறார்கள். இந்த செய்தியறிந்த அவரது குடும்பத்தினர் மிகவும் சோகமான இத்தருணத்திலும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

Related image

இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கருவிழி ஆகியவை தானமாக வழங்கபட்டன. இதில், சிறுநீரகங்கள், கல்லீரல், கருவிழிகள் ஜிப்மர் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னை மருத்துவமனைக்கும் வழங்கபட்டன. ’இந்த உடல் உறுப்புகள், தேவையான ஏழு பேருக்கு பொருத்தப்படும் என, ஜிப்மர் டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் விவேகானந்தம் கூறுகையில், தங்கள் குடும்பத்தின் ஏழ்மையான சூழ்நிலையிலும் தங்களது மகனது  உடல் உறுப்புகளை தானம் செய்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 உயிர்களை காப்பாற்றியுள்ளார்கள். இவர்களுக்கு எங்களது மருத்துவமனையின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். தானம் பெற்ற அந்த ஏழு நபர்களும் தற்போது நலமாக உள்ளார்கள் என்று தெரிவித்தார்.


Advertisement