"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
இரவு நீண்ட நேரம் விழித்திருப்பவரா நீங்கள்.?! உஷார்.. இது உங்களுக்கு தான்.!
தூக்கம் என்பது நமக்கு மிகவும் அவசியம். அதுவும், சரியான நேரத்திற்கு தூங்குவது மிகவும் நல்லது. இப்பொழுது , இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் வேகு நேரம் தொலைபேசி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு இல்லாமல் 10 மணிக்குள் தூங்கி பாருங்கள் பல நன்மைகள் கிடைக்கும். அவை, என்ன என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
10 மணிக்குள் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் :
ஒரு மனிதனுக்கு 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியமான ஒன்று. இரவு மிதமான அளவு சாப்பிட்டு 10 மணிக்குள் தூங்கினால் காலையில் 6 மணிக்கு சிரமம் இல்லாமல் எழுந்திரிக்க முடியும். இரவு நீண்ட நேரம் கண் விழித்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம் என ஆய்வில் தெரிவித்துள்ளனர். மேலும், மன அழுத்தம் ஏற்படும். எனவே, சரியான நேரத்திற்கு தூங்குவது மிகவும் நல்லது.
இதையும் படிங்க: மூட்டு வலிக்கு பற்கள் கூட காரணமாக இருக்குமா.?! எப்படி தெரியுமா.?! உஷார்.!
மேலும், சரியான நேரத்திற்கு தூங்குவதால் அடுத்த நாள் காலை புத்துணர்ச்சியாக இருக்கும். அதோடு, இதயம் மற்றும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். நேரம் தவறி தூங்கினால் கண் பார்வை குறைய வாய்ப்பு உள்ளது.
இரவு தூங்காமல் வேகு நேரம் விழித்திருப்பவர்கள் சில உடல் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். உதாரணமாக நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து பாருங்கள் மன அமைதி கிடைக்கும். அந்த நாள் மிகவும் சுறுசுறுப்பாக அமையும். ஆகையால், முடிந்தவரை 10 மணிக்குள் தூங்கி விடுங்கள்.
இதையும் படிங்க: காய்ச்சல், சளிக்கு கபசுரக்குடிநீர்..! யாரெல்லாம் இதை குடிக்க கூடாது.. தெரியுமா.?!