அடேங்கப்பா.. இரவில் தொப்புளில் எண்ணெய் வைத்து உறங்கினால் இத்தனை நன்மைகளா?.. அசத்தல் டிப்ஸ்.!

அடேங்கப்பா.. இரவில் தொப்புளில் எண்ணெய் வைத்து உறங்கினால் இத்தனை நன்மைகளா?.. அசத்தல் டிப்ஸ்.!


Benefits of Navel Oil Massage Tamil

இரவு நேரங்களில் தொப்புளில் சொட்டு எண்ணெய் வைப்பது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. உடலின் நரம்பு மையப்புள்ளி தொப்புள் என்பதால், அதன் பின்னால் எழுபத்தாயிரத்திற்கும் அதிகமான நரம்புகள் இருக்கின்றன. கிராமங்களில் குழந்தைகள் அழுதால் சிறிதளவு எண்ணெய் தொப்புளில் விடுவார்கள். அதன்பின் குழந்தைகள் அழுகையை நிறுத்தும். அதனைப்போல, வாயு கோளாறு இருப்பின் சிறிதளவு பெருங்காயத்தை கரைத்து தொப்புளில் தடவினால் உடனடி பலன் கிடைக்கும். 

தொப்புளில் தினமும் எண்ணெய் விடுவது கண்பார்வை தெளிவாகும். இன்றுள்ள காலத்தில் தினமும் கணினி, செல்போன் போன்றவை உபயோகம் செய்வதால் கண்களில் வறட்சி ஏற்படுகிறது. இதனை தொப்புளில் எண்ணெய் வைப்பது மூலமாக குணப்படுத்தலாம். உடலின் சூட்டினால் ஏற்படும் பித்தவெடிப்பும் குணமாகும். சருமம் பளபளக்கும். உதட்டில் ஏற்பட்டு இருக்கும் வறட்சி மறையும். தலைமுடி ஆரோக்கியதுதான் செழித்து வளரும். 

Navel

மூட்டு வலி மற்றும் முழங்கால் வலிக்கு முக்கிய காரணமாக நரம்பு பாதிப்பு இருக்கிறது. தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கால்களின் நரம்புகள் ஆஸ்வாசமடைந்து மூட்டு, கால் வலிகள் குணமாகும்.  உடல் சோர்வு, உடல் நடுக்கம், கணைய பாதிப்புகள் குணமாகும். கர்ப்பப்பை வலுப்பெறும். நல்ல தூக்கம் கிடைக்கும். இரத்த ஓட்டம் உடல் உறுப்புகளை ஆரோக்கியாமாக வைக்கும். உறங்குவதற்கு முன்பு தொப்புளை சுற்றி எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் கண்வலி மற்றும் சரும பிரச்சனை சரியாகும். 

முழங்கால் வலி, மூட்டுவலி, கால் வலி போன்றவையும் குணமாகும். வேப்ப எண்ணெயை தொப்புளில் வைத்து உறங்கினால் சரும வியாதி, சரும தொற்றுகள் குணமாகும். உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாதம் எண்ணெயை தொப்புளில் வைத்து மசாஜ் செய்தால் முகம் மற்றும் சருமம் பளபளக்கும். முகம் இளமையான தோற்றத்தை பெறும்.