"மன அமைதி முதல் மூளை செயல்பாடு வரை..." தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

பால் மற்றும் பாலில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதாக இருக்கிறது. பாலில் இருந்து எடுக்கப்படும் தயிர் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு நம் உடலின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிட்டு முடித்தவுடன் தயிரோடு சீனி சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கின்றனர். இது மிகவும் சுவையாக இருப்பதோடு இவற்றால் நம் உடல் மற்றும் மனதிற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பாலில் இருந்து எடுக்கப்படும் தயிரில் கால்சியம், வைட்டமின்கள், ப்ரோபயாடிக், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்திருக்கிறது. தயிர் நம் உடலில் ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதோடு உடல் மற்றும் எலும்புகள் வலிமை பெறுவதற்கும் உதவுகிறது. இத்தனை சத்துக்களை உள்ளடக்கிய தயிரை சர்க்கரையோடு சேர்த்து சாப்பிடுவது நம் மனதிற்கு மிகவும் நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மன அமைதியை கொடுக்கும்
தயிரில் சீனி சேர்த்து சாப்பிடுவது மன அமைதியைக் கொடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இவ்வாறு சாப்பிடும் போது கோபத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மன அமைதி இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் எந்த வேலையிலும் நாட்டமில்லாமல் சோர்வாக இருப்பவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் அவர்களுக்கு உற்சாகம் கிடைப்பதோடு மனநிலையிலும் நல்ல மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: இதயத்தை காக்கும் ஆம்லா... வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்.!! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா.!!
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்
சர்க்கரையுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் என மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சாப்பிடுவதால் 14 வகையான மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்புடன் நடைபெறுவதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். மூளையின் ஆரோக்கியம் மற்றும் மன அமைதிக்கு தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது மிகச் சிறந்த மருந்தாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: PCOD பிரச்சனையால் அவதியா.? 30 நாளில் சூப்பரான தீர்வு.!! எளிமையான வீட்டு வைத்தியம்.!!