செயற்கை கருத்தரித்தல் முறைகள் என்னென்ன?.. தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

செயற்கை கருத்தரித்தல் முறைகள் என்னென்ன?.. தெரிந்துகொள்ளலாம் வாங்க..!


Artificial insemination details tamil

மலட்டுதன்மையுடைய தம்பதிகளுக்கு செயற்கையான முறையில் கருத்தரிக்கும் வழிகள் குறித்து தற்போது காணலாம்.

கருப்பைக்குள் விந்து செல் உட்செலுத்தும் முறை :

கணவரிடம் விந்தணு சேகரிக்கப்பட்டு பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக கருப்பைக்குள் செலுத்தப்படுகிறது. பின்னர் இந்த விந்து செல்லானது, அண்டநாளத்தினை நோக்கி நீந்தி சென்று கர்ப்பம் தரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை அதிக விந்து செல்களை உற்பத்தி செய்ய இயலாத ஆண்களுக்கு செய்யக்கூடியதாகும்.

Artificial insemination

உடலுக்கு வெளியில் கருவுற செய்யும் முறை :

இந்த முறையின் மூலமாக அண்டசெல் மற்றும் விந்து செல் உடலுக்கு வெளியில் பரிசோதனை கூட்டத்தில் இணைய வைக்கப்படுகிறது. இவ்வாறு இணைய வைக்கப்படும் கருவுற்ற முட்டைகள் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படுகிறது. இம்முறையானது அடைப்பட்ட அல்லது பாதிப்படைந்த அண்டநாளம் கொண்ட பெண்களுக்கு செய்யக்கூடியதாகும்.

அண்டநாளத்திற்குள் கருமுட்டையை செலுத்தும் முறை :

அண்டநாளத்திற்குள் கருமுட்டையை செலுத்தும் முறையின் மூலமாக கருமுட்டையில் விந்துசெல்லை செலுத்தி கருவுற்றபின் அண்டநாளத்தினுள் உட்செடுத்தப்படுகிறது.

Artificial insemination

சைட்டோபிளாசத்திற்குள் விந்து செலுத்தும் முறை :

ஒரே ஒரு விந்து செல்களை மிக கவனமாக கருமுட்டையில் செலுத்தி, கருவுற செய்த பின் கருமுட்டையை சைட்டோபிளாசத்திற்குள் செலுத்தப்படுகிறது.

விந்து செல்களை அண்டநாளத்திற்குள் செலுத்தும் முறை :

இந்த முறையின் மூலமாக அண்டகத்திலிருந்து முட்டைகள் சேகரிக்கப்பட்டு, விந்து செல்லுடன் சேர்த்து ஒரு அண்டநாளத்திற்குள் வைக்கப்படுகிறது. இந்த முறையின் மூலமாக உருவாகும் கருமுட்டை கருப்பை நோக்கி நகர்ந்து, கருப்பையில் பதிந்து கருத்தரித்தால் நடைபெறுகிறது.