தினமும் மதியம் குட்டி தூக்கம் போடுறீங்களா?.. இந்த தகவல் உங்களுக்குத்தான்... கவனமா இருங்க..! Afternoon Sleeping Tips Tamil

 

இரவு நேரத்தில் உறங்குவதை விட மதிய உறக்கம் பலராலும் விரும்பப்படுகிறது. மதிய உணவை முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தவாறு சிறுதூக்கம் போட்டால் பலரும் புத்துணர்ச்சி அடைவார்கள். மதிய நேர தூக்கம் சோம்பேறித்தனமான செயலாக கருதப்படும். குழந்தைகள், வயதானவர்கள் உறங்கினால் ஏற்றுக்கொள்வார்கள். 

கண்கள் அயர்ந்தால் உறங்குவது உறங்குவதில்லை தவறில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நீண்ட நேரம் அயர்ந்து உறங்கினால் சோர்வு, மந்தநிலை ஏற்படும். நாம் இயல்பாக பணியாற்ற நேரமாகும். அதனால் சில நேரம் ஏன் உறங்கினோம் என்ற நிலை ஏற்படும். மதிய நேர உறக்கம் இரவு நேர தூக்கத்தை பாதிக்கும். 

sleeping

இரவு நேரத்தில் தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நபர்கள், மதியம் உறங்குவதை தவிர்க்க வேண்டும். மதியம் 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை உறங்கலாம். வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஒருமணிநேரம் வரை உறங்கலாம். மதியம் கண் அயர்வதற்கும், இரவில் உறங்குவதற்கும் ஐந்து மணிநேர இடைவெளி அவசியமானதாகும்.

மதியம் உறங்கி எழுவார்கள் மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்யலாம். இரவில் பணியாற்றுபவர்கள் மதியம் உறங்குவது நல்லது. அலுவலகம், வகுப்பறையில் இருப்போர் நீரில் முகத்தை கழுவி உறக்கத்தை கலைக்கலாம்.