AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
வெளுத்து வாங்கும் மழை! தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சற்று முன் அவசர எச்சரிக்கை..!!!
வடகிழக்கு பருவமழை வேகமெடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் இடமெல்லாம் வானம் கருமேகங்களால் சூழப்பட்டு மழை தாக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் பின்னணியில் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இன்று பல மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (அக்.23) மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை ஆலோசனை
பொதுமக்கள் அவசர அவசியமின்றி வெளியே செல்லாமல் இருப்பதுடன், விவசாயிகள் மற்றும் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்! தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
இந்நிலையில்மழை தீவிரம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் இணைந்திருப்பது மிக முக்கியமாகும்.
இதையும் படிங்க: இரவில் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் கனமழை! இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்....