பணக்காரர் ஆக ஆசைப்படுறீங்களா? இந்த 7 தந்திரம் தெரிஞ்சு வச்சுக்கோங்க...



simple-daily-habits-to-become-rich-tamil-guide

பணக்காரராக மாற வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கலாம். இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே போதாது. சில அன்றாட செயல்களை சரியாகப் பின்பற்றினால் நிச்சயமாக நிதி வளர்ச்சி காண முடியும். இங்கு பணக்காரராக மாற உதவும் சில முக்கிய வழிமுறைகளை பார்ப்போம்.

பணக்காரர் ஆகும் வழிகள்

1.தினசரி செலவுகளை பதிவு செய்வது முக்கியம்

உங்கள் தினசரி செலவுகளை பதிவு செய்வது நிதி ஒழுங்குமுறையின் முதல் படியாகும். செலவுகளை பதிவு செய்வதன் மூலம் தேவையற்ற செலவுகளை சுலபமாக கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும்.

2.மாத வருமானத்தில் இருந்து சேமிக்க பழகுங்கள்

உங்கள் மாத வருமானத்தில் குறைந்தபட்சம் ஒரு பகுதியை சேமிக்க அல்லது முதலீடு செய்ய வேண்டும். இந்த பழக்கம் அவசர நிதி தேவைகள் வந்தபோது பயனளிக்கும்.

இதையும் படிங்க: இப்படி பண்ணுங்க! தொட்டி ரோஜா செடியில் கூட கொத்து கொத்தாய் ரோஜா பூக்குமாம்! சூப்பர் டிப்ஸ் இதோ...

3.தினமும் நிதி அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்

நிதி கல்வி என்பது பணக்காரராக மாற தேவையான முக்கியமான ஆயுதமாகும். தினமும் குறைந்தது 15 நிமிடம் நிதி மேலாண்மை, முதலீடுகள் போன்ற விஷயங்களை படிக்கவோ அல்லது கேட்கவோ பழகுங்கள்.

4.தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடிவு எடுங்கள்

ஒவ்வொரு நாளும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும் என்ற மனநிலையுடன் எழுங்கள். இந்த சின்ன சின்ன முடிவுகள் நீண்ட காலத்தில் பெரிய நிதி பலன்களை தரும்.

பணக்காரர் ஆகும் வழிகள்

5.நிதி இலக்குகளை திட்டமிடுங்கள்

குறுகிய மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை திட்டமிடுவது மிகவும் அவசியம். ஏன் நாம் சேமிக்கிறோம், ஏன் முதலீடு செய்கிறோம் என்பதற்கான நோக்கங்களை தெளிவுபடுத்துங்கள். இது உங்கள் நிதி திட்டத்தில் உறுதியை தரும்.

6.பொருட்கள் வாங்கும் முன் சிந்திக்க பழகுங்கள்

ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால், அது உண்மையில் தேவையா என்று கேள்வி எழுப்புங்கள். தேவை எனத் தோன்றினால் கூட, அந்த செலவினை 24 மணி நேரத்திற்கு தள்ளி யோசியுங்கள். இது நியாமான முடிவுகள் எடுக்க உதவும்.

பணக்காரர் ஆகும் வழிகள்

7.தினசரி சிறு முதலீடு முக்கியம்

தினமும் ரூ.100 அல்லது உங்கள் வசதிக்கேற்ப ஒரு தொகையை நம்பகமான இடத்தில் முதலீடு செய்யுங்கள். ஏனெனில் சேமிப்புடன் முதலீடு செய்யும் பழக்கம் தான் செல்வம் பெருக்கும்.

இதையும் படிங்க: Optical illusion: படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் தெரிவது என்ன? இதிலிருந்து உங்கள் குணத்தை அறிந்து கொள்ளலாம்...