உலகம் Covid-19

தொடரும் கோரத்தாண்டவம்! எட்டே நாட்களில் இரட்டிப்பான உயிரிழப்புகள்.. ஒரு லட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை!

Summary:

Corono death crossed one lakh

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்முறையாக சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகிலுள்ள 100 நாடுகளுக்கும் மேலாக பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

எட்டு நாட்களுக்கு முன்பு கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 50000 ஆக இருந்தது. தற்போது ஒரு லட்சத்தை கடந்துவிட்டது.

அதிகபட்சமாக இத்தாலியில் 18849, அமெரிக்காவில் 18638, ஸ்பெயினில் 16081, பிரான்ஸில் 13197 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் பலி எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்குகிறது.

உலக அளவில் மொத்த பலி எண்ணிக்கை 102892 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement