இந்தியா சினிமா

#வீடியோ: ஐ.ஏ.எஸ் கனவுடன் அசத்தல் நடிப்பு.. கலக்கல் ப்ரமோவால் கொண்டாட்டம்.!

Summary:

#வீடியோ: ஐ.ஏ.எஸ் கனவுடன் அசத்தல் நடிப்பு.. கலக்கல் ப்ரமோவால் கொண்டாட்டம்.!

சீரியலில் தனது ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்க பாடுபடும் நடிகை, தனது திரையுலக வாழ்க்கை பயணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

ஜீ கன்னடா தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் புட்டக்கனா மக்களு (Puttakkana Makkalu) தொடரில், நடிகை உமா ஸ்ரீயின் மகளாக நடிப்பவர் நடிகை சஞ்சனா பர்லி. இவர் தனது கதாபாத்திரத்தில் எப்படி தோன்றுகிறார்?, கதாபாத்திரத்தில் தனது வாழ்நாள் கனவான ஐ.ஏ.எஸ்க்கு எப்படி பயின்று வருகிறார் என்பது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். 

இதுகுறித்து நடிகை சஞ்சனா பர்லி தெரிவிக்கையில், "எனக்கு "லக்னே பத்ரிகே" தொடர் சிறிய அனுபவத்தை சின்னத்திரையில் அளித்தது. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக புகழ்பெற்று வந்த நிலையில், சீரியலின் முடிவு சலிப்புடன் இருந்த காரணத்தால் பார்வையாளர்கள் குறைந்து, ஒட்டுமொத்த குழுவுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. சீரியலில் நடித்ததற்கு பின்னர் வாய்ப்புகள் அதிகம் வந்தாலும், படிப்பில் நாட்டம் இருந்த காரணத்தால் சிறிய இடைவெளி எடுக்கவும் முயற்சி செய்தேன்.  

கடந்த மார்ச் மாதத்தின் போது இயக்குனர் அரூர் ஜெகதீஷ் எனக்கு தொடர்பு கொண்டு, குழந்தையாக தொடரில் நடிக்க கூறினார். நான் தொடக்கத்திலேயே அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், இயக்குனர் இதனை நீங்கள் பரிசீலனை செய்து பாருங்கள் என நேரமும் வழங்கினார். பின்னர், நான் குழந்தை வேடத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், இரண்டாவது கொரோனா அலையும் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, இயக்குனருக்கு தொடர்பு கொண்டு எனது முடிவினை தெரிவித்தேன். கோரிக்கையாக கல்வியும் எனக்கு முக்கியம் என்று தெரிவித்தேன். 

படப்பிடிப்புகளுக்கு முன்னர் லுக் செட் செய்து, ரிகர்சல் நடந்தது. அனைத்து முன்பணிகளும் நிறைவு பெற்றதும், செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. நான் புட்டக்காவின் இரண்டாவது மகள் சினேகா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். சிறுவயதில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற ஆசை. கிராமத்து பெண்ணின் தோற்றத்தை அடைந்து நடிக்க தொடங்கினேன். உமா ஸ்ரீ அம்மாவுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. முதல் நாள் படப்பிடிப்பில் அம்மா என்னிடம் ஹாய் சொன்ன தருணம் மறக்க முடியாது. 

ஒரு நாள் பெரிய அளவிலான காட்சி படமாக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்ற நிலையில், அன்று படப்பிடிப்பு தளத்தில் சிறு அளவிலான சத்தம் கூட இல்லை. நான் நடித்து முடித்ததும் அம்மா உமா ஸ்ரீ எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தார். அவரின் வார்த்தைகள் எனக்கு உத்வேகம் அளித்தது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கல்லூரிக்கு செல்கிறேன். எனது ஆசிரியர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.


Advertisement