திடீர் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல இளம் திரைப்பட விமர்சகர்! அதிர்ச்சியில் திரைபிரபலங்கள் இரங்கல்!!young-movie-youtuber-dead-by-cardiac-arrest

பிரபல சினிமா விமர்சகரும், கலாட்டா யூடியூப் சேனலின் விஜேவுமான கௌஷிக் மாரடைப்பு காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கூறப்படுகிறது. 

கௌஷிக் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர். இவர் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை இண்டர்வியூ எடுத்ததன் மூலம் பிரபலமானவர். இவருக்கு 35 வயதே ஆகிறது.

Gowsik

பொறியியல் பட்டதாரியான அவர் படங்களின் மீதிருந்த ஆர்வத்தால் யூடியூப் சேனலில் விமர்சகராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் சிறந்த தொகுப்பாளராக வலம்வந்த அவர் நேற்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மரணத்திற்கு அதிர்ச்சி கலந்த வேதனையோடு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.