அடேங்கப்பா! யோகி பாபுவின் படத்திற்கு இப்படியொரு தலைப்பா? புதிய அவதாரத்தால் மிரண்டுபோன ரசிகர்கள்!!

அடேங்கப்பா! யோகி பாபுவின் படத்திற்கு இப்படியொரு தலைப்பா? புதிய அவதாரத்தால் மிரண்டுபோன ரசிகர்கள்!!


yogibabu next movie title

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் தற்போது அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் யோகி பாபு. அஜித், விஜய் என் முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் யோகி பாபு சிறிய பட்ஜெட் படங்களிலும், எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து வருகிறார்.

யோகி பாபுவிற்கு தற்போது நிறைய படங்கள் கை வசம் உள்ளன. பிரபல ஹீரோக்களுடன் காமெடி நடிகராகவும், பிரபல நடிகைகளை காதலிக்கும் மன்மதனாகவும், குழந்தைகளுக்கு பிடித்தமான நகைச்சுவை வேடங்களையும் ஏற்று தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளவர் யோகி பாபு.

kadhal modhal

மேலும் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்ம பிரபு திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் யோகிபாபு அடுத்ததாக லிபிசினி கிராப்ட்ஸ் தயாரிப்பில், கன்னட இயக்குனர் கிருஷ்ணா சாய் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் யோகிபாபுவிற்காக அமைக்க உள்ளார்.

kadhal modhal

மேலும் இந்த திரைப்படத்தில் ஸ்ரேயா குப்தா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு பிரதாப் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இப்படத்திற்கு படக்குழு காதல் மோதல் 50/50 என பெயர் வைத்துள்ளனர்.