சினிமா

எனக்கு யோகிபாபுவுடன் திருமணமா? இணையத்தை அதிரவைத்த ஒத்த புகைப்படம்! பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ!

Summary:

yogibabu marriage actress post video

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களுள் தற்போது அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் யோகி பாபு. இவர் அஜித், விஜய் என் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மேலும் காமெடி நடிகரான இவர் ஹீரோவாக களமிறங்கி பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் யோகிபாபு சமூகவலைதள பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் யோகிபாபுவிற்கு திருமணமாகிவிட்டது, இவங்க தான் அவரது மனைவி என தகவல்களை பரப்பி வந்தனர். இந்நிலையில் யோகிபாபு, என் கல்யாணம் பற்றி தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே என விளக்கமளித்திருந்தார்.

   

இந்நிலையில் அந்த புகைப்படத்தில் இருந்த நடிகை சபிதா ராய் இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த போட்டோ கன்னிராசி பட ஷூட்டிங் பிரேக்கில் எடுக்கப்பட்டபுகைப்படம். காமெடி நடிகர் யோகிபாபு அவருக்கும் எனக்கும் சக நடிகை என்பதைத் தாண்டி எந்தவித சம்மந்தமில்லை. நல்ல மனிதர் மற்றும் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான். அவரது பெயரை கெடுக்காதீங்க என கூறியுள்ளார்.

  


Advertisement