புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அட.. இவரும் இருக்காரா! அப்போ வேற லெவல்தான்! தளபதி 66-ல் இணைந்த முக்கிய பிரபலம்!! யார்னு பார்த்தீங்களா!!
தளபதி விஜய், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தளபதி 66 படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி 66 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. யோகிபாபு தளபதி விஜய்யுடன் இணைந்து சர்க்கார், பிகில் மற்றும் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.