அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தமிழைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
தமிழ் திரைத்துறையில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் 2009ம் ஆண்டு "யோகி" படத்தில் அறிமுகமானார். இதையடுத்து தில்லாலங்கடி,வேலாயுதம், பையா, தூங்கா நகரம், ராஜபாட்டை, சூது கவ்வும், பட்டத்து யானை, அட்டகத்தி, அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் முதலில் "லொள்ளு சபா" நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, அதன் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்காதபோது, "யாமிருக்க பயமேன்" படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார்.
ஒருகட்டத்தில் கோலிவுட்டில் காமெடி நடிகர்களுக்கான வெற்றிடம் உருவாக, அந்த இடத்தை யோகி பாபு நன்கு பயன்படுத்திக்கொண்டார். மேலும் கோலமாவு கோகிலா, மண்டேலா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.

சமீபத்தில் ஷாரூக்கானுடன் "ஜவான்" படத்திலும் நடித்திருந்த யோகி பாபு, தற்போது தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கிறாராம். பிரபாஸின் அடுத்த படத்தில் யோகி பாபு கமிட்டாகியுள்ளதாகவும், அதற்காக தனது சம்பளத்தை தமிழில் வாங்குவதை விட 3 மடங்கு உயர்த்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.