நள்ளிரவில் திடீரென்று திருத்தணிக்கு சென்ற யோகி பாபு.. என்ன காரணம் தெரியுமா.?

நள்ளிரவில் திடீரென்று திருத்தணிக்கு சென்ற யோகி பாபு.. என்ன காரணம் தெரியுமா.?


yogi-babu-went-tirutani-temple-for-new-year

2009ம் ஆண்டு அமீரின் "யோகி" படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் யோகி பாபு. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக முதன்மை கதாப்பாத்திரங்களிலும், துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

Jawan

தில்லாலங்கடி, பையா, வேலாயுதம், தூங்கா நகரம், ராஜபாட்டை, கலகலப்பு 2, அட்டகத்தி, பட்டத்து யானை, சூது கவ்வும், வீரம், மான் கராத்தே, என்னமோ ஏதோ, அரண்மனை, யாமிருக்க பயமே, டிமான்டி காலனி, இவனுக்கு தண்ணில கண்டம், காக்கா முட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து இந்த வருடம் இவரது நடிப்பில் அயலான், அரண்மனை 4, கங்குவா, படகு, அந்தகன், பூமர் அங்கிள் உள்ளிட்டபல படங்கள் வெளியாகவுள்ளன. மேலும் மலையாளத்திலும் யோகி பாபு அறிமுகமாகியுள்ளார். மேலும் இந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டுள்ளார். ஜனவரி 1 நள்ளிரவு 12மணிக்கு திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட யோகி பாபுவுக்கு கோவில் அறங்காவலர் குழு சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Jawan

இதையடுத்து அங்கு வந்த பக்தர்களுடன் செல்பீ எடுத்து புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்ந்தார் யோகி பாபு. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி யோகி பாபு 2024 ஆம் ஆண்டு நடிக்கப் போகும் படங்களுக்காக ரசிகர்கள் வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.