ஜி,பி. முத்து ஹீரோவாக நடிக்கப் போகிறாரா?! உண்மையை உடைத்த யோகி பாபு.?

ஜி,பி. முத்து ஹீரோவாக நடிக்கப் போகிறாரா?! உண்மையை உடைத்த யோகி பாபு.?


Yogi babu openup about gp Muthu

டிக் டாக் தடை செய்யப்படுவதற்கு முன்பு, தனது வீடியோக்கள் மூலம் டிக் டாக்கில் பிரபலமானவர் ஜி பி முத்து தற்போது இவர் ஒரு யூ ட்யூப் சானல் ஆரம்பித்து அதில் தனது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Gpmuth

இதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் ஜி பி முத்துவிற்கு கிடைத்தது. தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, மக்களை சிரிக்க வைத்து வெகுவாக கவர்ந்தார்.

தொடர்ந்து பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வரும் ஜிபி முத்து, முன்னதாக 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் யோகி பாபு ஜி பி முத்துவை நேர்காணல் செய்தார். அதில்,யோகி பாபு நிறைய கேள்விகளை ஜி பி முத்துவிடம் கேட்டார்.

Gpmuth

அப்போது திடீரென யோகி பாபு, "தயாரிப்பாளர் சசி இயக்கத்தில் நான் காமெடியனாக நடிக்கப் போகும் படத்தில் நீங்கள் தான் ஹீரோ" என்று யோகி பாபு கூறினார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைகேட்டு ஜிபி முத்துவின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.