யோகி பாபுவின் ஒரு படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!
யோகி பாபுவின் ஒரு படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!

தமிழ் சினிமாவில் யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இதில் இவர் நடித்திருந்த பண்ணி மூஞ்சி வாயன் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் யோகிபாபுவின் அசுர வளர்ச்சிபற்றி நடிகர் விஜய் பேசியிருந்தார்.
நடிகர் வடிவேலு திரையுலகில் இருந்து விலகியதை அடுத்து நடிகர் சூரி அவரது இடத்தை பிடித்தார். ஆனால் அவரை அரைத்தமாவையே திரும்ப திரும்ப அறைகிறாரா என்ற விமர்சங்கங்கள் எழுத்தது. இதனால் நடிகர் யோகிபாபுவிற்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின. மாதம் 10 படங்கள் வெளிவந்தால் அதில் குறைந்தது 8 படங்களிலாவது யோகிபாபு நடித்துள்ளார்.
இந்நிலையில் நாளுக்கு நாள் புகழின் உச்சிக்கு செல்லும் யோகி பாபு ஒரு படத்திற்கு ஒரு கோடி சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகின.காமெடி ரோலுக்கே இவ்வளவு என்று தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகின்றனராம்.
ஆனால் இதுபற்றி யோகிபாபுவிடம் கேட்டதற்கு ஒரு கோடி இல்லை, ஒரு படத்திற்கு மூன்று கோடி கேட்பதாகக்கூட செய்திகள் வந்தது. இதையெல்லாம் நம்பிடாதீங்க மக்களே என்று கிண்டலாக கூறியுள்ளார்.