சினிமா

அதிகாலையில் திருமணம்; மணக்கோலத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட யோகிபாபு

Summary:

Yogi babu marriage photo

தமிழ் சினிமாவில் தற்போது முன்னனி காமெடி நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. தனது உடல் அமைப்பையும் பொருட்படுத்தாது நடிப்பில் அசத்துபவர் அவர். 

பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள யோகிபாபு கதாநாயகனாகவும் சில படங்களில் அசத்தியுள்ளார். திரையில் அவரை கண்டாலே அனைவருக்கும் சிரிப்பு தானாகவே வந்துவிடும். 

35 வயதாகும் யோகிபாபு இன்று மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் அவர்களது குலதெய்வ கோவிலில் இன்று அதிகாலை நடைபெற்றது. 

இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள யோகிபாபு மணக்கோலத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. 


Advertisement