செம.. தனி நாயகியாக மிரட்டும் சமந்தா! எதிர்பார்ப்பை எகிற வைத்த யசோதா கிளிம்ப்ஸ் வீடியோ!!

செம.. தனி நாயகியாக மிரட்டும் சமந்தா! எதிர்பார்ப்பை எகிற வைத்த யசோதா கிளிம்ப்ஸ் வீடியோ!!


Yasotha movie gylimpse video viral

தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் நாயகிகளில் ஒருவராக வலம் வரும் சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  அதனைத் தொடர்ந்து சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா.

 இதனை பிரபல இயக்குனர்களான ஹரி-ஹரிஷ் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது யசோதா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி அனைவரையும் அசரவைத்துள்ளது. மேலும் அது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.