ஒரு நொடியில உயிரே ஆடிப்போச்சு... ராட்சத பாம்பில் செயலால் பீதியில் உறைந்த யாஷிகா ஆனந்த்.!



Yashika latest video viral

தமிழில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இவர் திரைப்படங்களில் மட்டும் கிளாமராக நடிப்பதை தாண்டி அவ்வ போது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் அரைகுறை ஆடை அணிந்து மிகவும் கிளமராக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் குடையான உடை அணிந்து மஞ்சள் நிற ராட்சத பாம்பை தனது கழுத்தில் வைத்து கொண்டு கூலாக போஸ் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பின் தலை யாஷிகாவின் பாதத்தை நோக்கி வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.