மாஸ் காட்டும் அருண் விஜய்யின் யானை! 25 நாட்களில் குவித்த வசூல் எவ்வளவு தெரியுமா? வெளிவந்த தகவல்!!yanai-movie-collection-in-25-days

தமிழ் சினிமாவில் பல வருட போராட்டங்களுக்கு பிறகு தற்போது முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் யானை. இதனை சூப்பர் ஹிட் பட இயக்குனரான  ஹரி இயக்கியுளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக  ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், அம்மு அபிராமி, ராஜேஷ் புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். குடும்ப படமான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Yanai

இந்த நிலையில் யானை படம் வெளியாகி 25  குவித்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது யானை திரைப்படம் வெளியாகி 25 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ. 20 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.