சினிமா

நடிகை ஜோதிகாவின் 50வது படம் ரிலீஸ்! வாவ்.. எப்படி வாழ்த்து கூறியுள்ளனர் பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

நடிகை ஜோதிகாவின் 50வது படம் ரிலீஸ்! வாவ்.. எப்படி வாழ்த்து கூறியுள்ளனர் பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக களமிறங்கியதை தொடர்ந்து அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

 அதனைத் தொடர்ந்து ஜோதிகா ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்  திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு இடைவெளிவிட்டு இருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் அசத்தலான ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அவர் தற்போது கதை மற்றும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் நடித்த உடன்பிறப்பே திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜோதிகாவின் 50வது படமான இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஜோதிகாவின் புகைப்படத்துடன் உடன்பிறப்பே படத்தின் தகவல்கள் வெளியிடப்பட்டு அசத்தலான மணல் சிற்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலான நிலையில் பலரும் ஜோதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement