சினிமா

நடிகர் யோகிபாபுவின் அடுத்த படம் யாருடன் தெரியுமா ? ரசிகர்கள் அதிர்ச்சி !

Summary:

Who do you know next with actor Yogi Babu? Fans shocked!

தற்போது வளர்ந்து வரும் பிரபல திரைப்பட முன்னணி காமெடி நடிகர்களுள் நடிகர் யோகிபாபும் ஒருவர் ஆவார். இவர் நடித்த படங்கள் அனைத்திலும் இவர் மிகவும் சிறப்பான முறையில் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்த கோலமாவு கோகிலா என்னும் திரைப்படம் வெளியானது. அந்த படம் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது. நடிகர் யோகிபாபு முதன் முதலில் சின்னத்திரையில் தான் பணிபுரிந்தார். பின்பு மெல்ல மெல்ல அவரது உழைப்பால் உயர்ந்து வெள்ளித்திரைக்கு வந்தார்.

இந்த சூழ்நிலையில் நடிகர் யோகிபாபு கதாநாயகனாக கூர்கா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் யோகிபாபு பரியேறும் பெருமாள் என்னும் படத்திலும் நடித்து வருகிறாராம். இந்த படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஆனந்தி நடிக்கிறாராம். இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார்.

இந்த படம் உருவான விதத்தை நடிகர் யோகிபாபு ஒரு வீடியோவில் கூறியுள்ளார். மேலும் நடிகர் யோகி நான் பத்தாவது வரை தான் படித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் நான் கல்லூரி மாணவனாக நடித்த அந்த காட்சிகள் மறக்க முடியாத நினைவுகளாகும். கல்லூரியிலே அந்த 32 நாட்களும் வலம் வந்தது ஒருவேளை நானும் படித்திருக்கலாமோ என்ற எண்ணத்தை தூண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் இயக்குனர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் திரைக்கதையை உருவாக்கப்பட்டது என நினைக்கிறேன் என்று நடிகர் யோகிபாபு கூறியுள்ளார். 


Advertisement