சினிமா

சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? சற்றுமுன் வெளியான அதிகார பூர்வமான அறிவிப்பு!

Summary:

When will the music launch ceremony be seen? Just before the official announcement !

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் தமிழக திரையுலகில் உள்ள பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் மிகவும் பிரமாண்டமான முறையில் இருக்கும். மேலும் இவரது படங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஒரு அதிரடி படமாக தான் இருக்கும்.

இவர் ஏழாம் அறிவு, கத்தி மற்றும் துப்பாக்கி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் இவருக்கு அதிகம் வெற்றியை தான் தந்துள்ளது.
அதிலும் குறிப்பாக துப்பாக்கி மாறும் கத்தி என்னும் இளைய தளபதி விஜய்யின் கூட்டணியில் அமைந்த இந்த இரண்டு படங்கள் மாபெரும் வெற்றியை தேடி தந்தது.

இந்த படங்களுக்கு அடுத்த படியாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் இளைய தளபதி விஜய்யின் கூட்டணியில் அமைந்த படம் தான் "சர்கார்" . இந்த படம் மிகவும் பிரமாண்டமான முறையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் தளபதி விஜய்யின் நடிப்பிலும் உருவாகி வரும் இந்த "சர்கார்" என்னும் படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது என கூறப்படுகிறது. மேலும் இந்த சூழ்நிலையில் இந்த "சர்கார்" படத்தின் இசைவெளியீட்டு விழா வருகின்ற காந்தி ஜெயந்தி அன்று நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் துவங்கி நடந்து வருகிறது என்றும். மேலும் சென்னையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் மிகவும் பிரம்மாண்ட முறையில் அரங்குகள் அமைத்து முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கி வருவதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 


Advertisement