சினிமா

சீமராஜா படத்தில் நடிகர் சிவாவுக்கு என்ன வேடம் தெரியுமா? வெளியான அதிகாரபூர்வமான தகவல் !

Summary:

What is the role of actor Siva in Seemaraja? Official Announcement !

செப்டம்பா் 13ம் தேதி அன்று நடிகர் சிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா என்னும் இந்த திரைப்படம் வெளியாகும் என்று படக் குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

இந்த சீமராஜா படத்தை இயக்குனர் பொன்ராம் அவர்கள் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் இயக்குனர் பொன்ராம், சிவகாா்த்திகேயன் மற்றும் சூரி கூட்டணியில் அமைந்த 3வது படம் ஆகும்.

இந்த சீமராஜா படத்தில் கதாநாயகியாக நடிகை சமந்தா அவர்கள் நடித்துள்ளார். 

மேலும் இந்த படத்தில் நடிகை சிம்ரனும் மிரட்டும் வில்லியாக நடித்துள்ளார். 

நடிகர் நெப்போலியன் இந்த படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார்.

சூரி, யோகி பாபு மற்றும் மனோபாலா, சதீஷ் சதீஷ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரசிகா்கள் இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிா்பாா்த்து உள்ள நிலையில் தற்போது அந்த படத்திற்கான டப்பிங் பணிகள் நிறைவு பெற்று உள்ளது,

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பா் 13ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் இந்த சீமராஜா படத்தில் நடிகர் சிவா சீமராஜா மற்றும் கடம்பவேல்ராஜா என்று இரட்டை வேடத்தில்  நடித்துள்ளதாக அறிவித்து உ ள்ளனர்.

👑சீமராஜா - கடம்பவேல் ராஜா👑
 #SeemaRaja #KadambavelRaja

 #DoubleTreatOnSep13th https://t.co/18xF3q4h8C

— RD RAJA (@RDRajaofficial) September 10, 2018

 


Advertisement