#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
தனுஷின் அனேகன் பட நடிகை என்ன ஆனார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் 90களில் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அனேகன்' இப்படத்தில் கதாநாயகியாக அமீரா தஸ்தூர் என்பவர் நடித்திருப்பார்.
அனேகன் திரைப்படம் மிகப் பெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தில் நடித்தவர்களின் நடிப்பு பாராட்டப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்திற்கு பின்பு அமேரா தஸ்தூர்க்கு பட வாய்ப்புகள் எதுவும் பெரிதளவில் வரவில்லை.
இதனால் தமிழிலிருந்து தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கிய அமேரா 'மனசுக்கு நச்சந்தி' எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்கு பின்பு தெலுங்கிலும் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்பதால் இந்தி மொழி சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
இவ்வாறு தெலுங்கு, தமிழ் என ஆரம்பித்து தற்போது இந்தி சினிமாவில் தனது திரை வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் அமிரா தஸ்தூர், தற்போது நடித்திருக்கும் இந்தி திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.