ரோபோ சங்கருக்கு என்னாச்சு?.. சுகரா? இல்ல சரக்கா?.. கணவரின் நிலை குறித்து உண்மையை உடைத்த மனைவி..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி, சினிமா உலகிலும் கால்தடம் பதித்து பட்டையை கிளப்பும் நடிகர் ரோபோ சங்கர். இவர் குறுகிய காலத்திலே தனது நடிப்பு, நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்தவர்.
முதலில் பாடி பில்டராக இருந்தவர் மேடை காமெடியனாக அறிமுகமானார். பின் தொலைக்காட்சி மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் வாயிலாக சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான தீபாவளி என்ற படத்தின் மூலம் இவர் திரைக்கு அறிமுகமானார்.
முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும் பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2002-ஆம் ஆண்டு ரோபோ சங்கர், பிரியங்கா என்ற ஒரு நடனகலைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் வெளிவந்த விருமன், இரவின் நிழல் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் லெஜன்ட் படத்திலும் நடித்திருந்தார்.
பாடி பில்டராக இருந்த ரோபோ ஷங்கர் சமீபகாலமாகவே உடல்எடை குறைந்து காணப்பட்டார். சில நாட்களுக்கு முன் ரோபோசங்கர் மகள், அவருடன் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததில் அவரை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து என்ன ஆனது?, சுகரா?, இல்லை சரக்கா? என்று கேலிசெய்து வந்தனர்.
இந்நிலையில் அவரது மனைவி, "தன் கணவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தேவையில்லாமல் சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். இப்போது நடித்துவரும் படம் ஒன்றுக்காக தான் இந்த அளவு எடையை குறைத்து இருக்கிறார். அவர் முழு உடல் நலத்துடன் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.