என்னதான் ஆச்சு...? மீண்டும் நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி.!what-going-on-again-actress-khushbu-was-admitted-to-the

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும்  அரசியல் பிரமுகருமான குஷ்பூ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்  செய்தி தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் குஷ்பூ. 90களில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்கள் மற்றும் சின்னத்திரை  நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் . தற்போது பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.

kushboo

இந்நிலையில் இவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால் குஷ்பூவிற்கு என்ன ஆனது ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என பரபரப்பு உருவானது.

kushboo

இதனைத் தொடர்ந்து கிடைத்த தகவல்களின்படி முதுகு பகுதியில் இருக்கக்கூடிய  வால் எழும்பில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அறுவை சிகிச்சை முடிந்து   முழுமையாக நலமுடன் திரும்ப பிராத்தியுங்கள் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் குஷ்பூ.