
தொகுப்பாளினி ரம்யா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினி ரம்யா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் vj ரம்யா. விஜய் நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது, பல்வேறு விருது வழங்கும் விழாக்களையும் ரம்யா தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் ஓகே கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார் அம்மணி.
அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.
டிவி, சினிமா என பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார் ரம்யா. இந்நிலையில் மாட்டு வண்டி ஓடுவது, பானை செய்வது, பால் கறப்பது என கிராமத்து பெண்ணாகவே மாறியுள்ள இவரின் வீடியோ ஒன்றை பதிவுசெய்துள்ளார் . "தமிழ் பொண்ணு தமிழ் மண்ணு" என பெருமையாக அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement