சினிமா

வெள்ளை நிற உடையில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி ரம்யா..!

Summary:

VJ ramya latest hot photo shoot

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடியாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், நாடகங்கள், படங்கள் என மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் பலரும் மக்கள் மத்தியில் பிரபலம். அதில் ஒருவர்தான் VJ ரம்யா. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ரம்யா.

விஜய் நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது, பல்வேறு விருது வழங்கும் விழாக்களையும் ரம்யா தொகுத்து வழங்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர், ஒரு சில கருத்து வேறுபாடுகளால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது சினிமா, தொலைக்காட்சி என பிஸியாக இருந்து வருகிறார் ரம்யா.

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற உடையில் நீச்சல் குளத்தில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது ரம்யா கிடையாது. யாரோ மார்பிங் செய்துள்ளனர் என கூறி வருகின்றனர். 


Advertisement