ஹோட்டலில் தனிமை! வைல்டுகார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாரா இந்த பிரபல தொகுப்பாளினி!செம குஷியில் ரசிகர்கள்!

ஹோட்டலில் தனிமை! வைல்டுகார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாரா இந்த பிரபல தொகுப்பாளினி!செம குஷியில் ரசிகர்கள்!


Vj maheshwari may be participated in bigboss show

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி மகேஸ்வரி வைல்டுகார்டு என்ட்ரியாக நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டுள்ளது. இதில் பாடகர் வேல்முருகன், நடிகை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,  பாடகி சுசித்ரா மற்றும் கடந்தவாரம் சம்யுக்தா என 5 பேர் நாமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து தற்போது 13 போட்டியாளர்கள் மட்டும் வீட்டினுள்ளே உள்ளனர். 

இவ்வாறு நாளுக்குநாள் அன்பு,  காதல், சண்டை, வாக்குவாதம் மோதல் என பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி மகேஸ்வரி வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைய  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது மகேஸ்வரி பிரபல ஹோட்டல் அறையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விரைவில் ஒரு ஆச்சரியமான செய்தி வரும் என  பதிவிட்டிருந்தார். இதனை கண்ட நெட்டிசன்கள் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப் போவதாகவும் அதற்காகவே அவர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.  இந்த நிலையில் ரசிகர்கள்  பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்