சினிமா

இன்னும் 1 நாளே இருக்க, கடைசி நேரத்தில் பிக்பாஸ் 4ல் இருந்து விலகிய முக்கிய பிரபலம்! ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

Vj archana releaving from bigboss season 4

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 4வது சீசன் வரும் அக்டோபர் 4ஆம் தேதி 6 மணிக்கு தொடங்கவிருப்பதாகவும்,  அதனைத் தொடர்ந்து திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது எனவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. 

மேலும் சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, ஷிவானி நாராயணன்,  ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, பாடகர் அஜித், பாடகர் வேல்முருகன், நடிகர் பாலாஜி முருகதாஸ், நடிகர் சுரேஷ், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, நடிகர் அனுமோகன், மாடல் சோம்சேகர் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளதாக பெயர் பட்டியலும்  வைரலானது.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடைபெற்றது எனவும், அதில் கலந்துகொள்ள காத்திருந்த  வி.ஜே.அர்ச்சனா கடைசி நேரத்தில் விலகிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மற்றொரு தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அந்த நிகழ்ச்சிகளில் பாதிப்பு ஏற்படலாம் அதனால் அவர் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அர்ச்சனா தரப்பில் இருந்து எதுவும் கூறப்படவில்லை. 


Advertisement