சினிமா

புதுமாப்பிள்ளையாகும் நடிகர் விஷ்ணு விஷால்! இரண்டாவது திருமணம் எப்போ? முதன்முறையாக அவரே அளித்த பதில்!!

Summary:

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் முண்டாசுபட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்,  கதாநாயகன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கே.நட்ராஜின் மகள் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுடன்  பல நடிகைகளை இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன.

இந்நிலையில் விஷ்ணுவிஷால் 
பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா என்பவரை காதலிப்பதாக தெரிவித்தார். மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும். 
இந்த நிலையில் அவர் தற்போது காடன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ஜூவாலா கட்டா எனக்கு பெரும் ஆதரவாக உள்ளார். விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளோம். தேதி குறித்த தகவலை கூடிய விரைவில் அறிவிப்போம் என முதன்முதலாக தங்களது திருமணத்தை குறித்து வாய் திறந்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement