
vishal wish parthiban for arranging ilayaraja 75
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர் பார்த்திபன்.இவர் எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாகவும், அனைவரும் ரசிக்கும்படியும் செய்யக்கூடியவர். மேலும் பரிசளிப்பதிலும் இவர் வித்தியாசமான ஒன்றையையே மிகவும் நுணுக்கமாக தேர்வு செய்வார்.
இவரது நடிப்பிற்கு மட்டுமின்றி, பேச்சிற்கும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் பார்த்திபன் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்,இதனை தொடர்ந்து அண்மையில் தயாரிப்பளார் சங்கம் சார்பில் நடைபெற்ற இளையராஜா 75 விழாவுக்கு பல அற்புதமான ஏற்பாடுகளை தீவிரமாக செய்தார்.
இந்நிலையில் ஒரு சில கருத்து வேறுபட்டாலும், மனக்கசப்பாலும் சங்கத்தின் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகினார். மேலும் அவர் ஏற்பாடு செய்த இளையராஜாவின் விழாவிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
இதனைத்தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
மேலும் சந்திப்பிற்கு பிறகு விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்அப்பொழுது அவர் இளைய 75 நிகழ்ச்சியில் பார்த்திபனின் பங்கு மிகப்பெரியது. மேலும் அவர் செய்த முயற்சி இனி யாரும் செய்ய முடியாத மாபெரும் சாதனை. ஏ.ஆர் ரஹ்மானையும், இளையராஜாவையும் ஒரே மேடையில் நிற்க வைத்த பெருமை பார்த்திபனுக்கு மட்டுமே உரியது.
ஏ.ஆர் ரஹ்மான் இசைக்க, இளையராஜா பாட என இந்த காட்சியெல்லாம் வேறு எங்கும் பார்க்க முடியாது. அம்பானி வீட்டு விழாவில் கூட இது சாத்தியமில்லாதது. ஆனால் பார்த்திபன் தனிமனிதனாக சாதித்துள்ளார் என விஷால் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement