"வெறும் 4 கோடி வச்சிட்டு படம் எடுக்க வராதீங்க" விஷாலின் அதிரடி பேச்சு.!

உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்த விஷால், 2004ம் ஆண்டு "செல்லமே" திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை என்று பல ஆக்க்ஷன் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
"விஷால் பிலிம் பேக்டரி" என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார் விஷால். இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா ஆகியோர் நடித்த "மார்க் ஆண்டனி" திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இதுவரை 100கோடி வசூல் செய்துள்ள இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய விஷால், " மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்களில் நடிப்பேன்.
4 கோடியில் படம் எடுக்க முடியாது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட 125படங்கள் வெளியிட முடியாமல் முடங்கியுள்ளது. எனவே இந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துவிடுங்கள். தற்போது படங்களை தயாரித்து வெளியிடுவது மிகவும் கடினமாக உள்ளது" என்று விஷால் கூறியுள்ளார்.