இதை விட என்ன வேணும்.! செம ஹேப்பியோடு விஷால் சொன்ன குட் நியூஸ்! என்ன தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷால். ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள அவர் இறுதியாக வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதனை தொடர்ந்து விஷால், வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தங்களது ராணா புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தோஷமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Well wat more can I ask.
— Vishal (@VishalKOfficial) April 13, 2022
Supa happy to become an uncle again. The princess is born today to my princess darling sister aishu.
May god bless the new born girl and the couple.
Inshaallah. God bless. 🙏🙏🙏🙏
அதில் அவர், இதைவிட என்ன கேட்டு விட முடியும். மீண்டும் மாமாவாகியுள்ளேன் என்பதில் பெருமகிழ்ச்சி. எனது இளவரசி தங்கை ஐசுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. புதிய இளவரசியை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். இதற்கு முன்பு அவர் கடந்த ஆண்டு ஆர்யாவிற்கு குழந்தை பிறந்தபோது தான் மாமாவாகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.