சினிமா

படப்பிடிப்பில் நேர்ந்த பெரும் விபத்து! படுகாயமடைந்த நடிகர் விஷால்! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் விஷால் நடிகர் ஆ

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் விஷால் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து எனிமி என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விஷால் புதுமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில்  அடுத்த படத்தில் நடித்து வருகிறார். 

 இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் யோகி பாபு, மலையாள நடிகர் பாபு ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃப்லிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று விஷால் மற்றும் நடிகர் பாபு ராஜுக்கு இடையேயான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. 

அப்போது ஏற்பட்ட விபத்தில்  விஷாலின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடிபட்டு மயங்கி விழுந்த விஷாலை படக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement