500 ரூபாய் சம்பளமாக வாங்கிய விஜய்.. எந்த திரைப்படத்தில் தெரியுமா.?



Viral news about actor vijay

தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகராக கொடி கட்டி பறந்து வருபவர் இளைய தளபதி விஜய். இவர் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

vijay

தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து இளைய தளபதி எனும் பெயர் பெற்றுள்ளார் விஜய். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் விஜய், ஆரம்பகால கட்டத்தில் 500 ரூபாய் சம்பளமாக பெற்று திரைப்படங்களில் நடித்து வந்தாராம்.

அதாவது இளைய தளபதி விஜய் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சிறுவயதிலேயே திரைத்துறையில் காலடியெடுத்து வைத்தார். இவர் சிறுவனாக இருக்கும்போது 1984 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் சிறுவயது விஜயகாந்தாக விஜய் நடித்துள்ளார்.

vijay

இப்படத்திற்காக வெறும் 500 ரூபாயை மட்டுமே பெற்று நடித்திருக்கிறார். இச்செய்தி தற்போது இணையதளத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களால் பரப்பபட்டு வைரலாகி வருகிறது.