"சினிமாவில் ஜாதி இருக்கக் கூடாது" மாமன்னன் திரைபடத்தை விமர்சித்த வில்லன் நடிகர்..

"சினிமாவில் ஜாதி இருக்கக் கூடாது" மாமன்னன் திரைபடத்தை விமர்சித்த வில்லன் நடிகர்..



Villan acter reviews about mamannan movie

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் சாதிய ரீதியிலான திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் அறியப்படும் இயக்குனராக இருக்கிறார். தமிழில் முதன் முதலில் 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார்.

Mamannan

இப்படத்திற்கு பின்பு 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கி இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதன் பிறகு தற்போது உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார், பகத் பாஸில் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு வெளியான 'மாமன்னன்' திரைப்படம் தொடர்ந்து பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. இப்படம் திரையிடக்கூடாது என்று படம் வெளியாவதற்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் பின்பு இப்படத்தின் மீதான தடை நீக்கப்பட்டது.

Mamannan

மாமன்னன் திரைப்படம் வெளியான பின்பு பலவிதமான விமர்சனங்களை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனையடுத்து தற்போது வில்லன் நடிகரான ஆனந்தராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தை குறித்த பேட்டி அளித்திருக்கிறார். "சினிமாவில் ஜாதிய ரீதியிலான படங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். அனைவருக்கும் தங்களது இனம், மொழி, மதம் என்பது முக்கியமானது. அதை சினிமாவில் காட்டக் கூடாது" என்று காட்டமாக பேசியிருக்கிறார்.