சினிமா

பிரபல தமிழ்பட வில்லன் நடிகரின் தாயார் திடீர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள் இரங்கல் !

Summary:

Villain actor murli sharma mother passed away

தமிழ் சினிமாவில் பிரகாஷ்ராஜ் இயக்கி, அவர் நடிப்பில் வெளிவந்த தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் முரளி சர்மா. அத்திரைப்படத்தின் மூலம் பிரபலமான அவர் அதனை தொடர்ந்து பட்டத்து யானை,  பாயும்புலி, அஞ்சான்,  ஆரம்பம்,  தேவி, கென்னடி கிளப், சாஹோ என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

மேலும் இவர் வில்லன் கதாபாத்திரத்தில்  ரசிகர்களை மிரள வைத்துள்ளார். முரளி சர்மா தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் முரளி சர்மாவின் தாயார் பத்மா சர்மா அவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவத்தால் முரளி சர்மாவின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் 76 வயது நிறைந்த தாயார் பத்மா சர்மாவின் இறுதிச் சடங்குகள் நேற்று மும்பையில் நடைபெற்றது.  இந்நிலையில் அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள்,  ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement