சினிமா

அட.. இது தெரியுமா? சிறுத்தை பட வில்லன் நடிகரின் மனைவி இந்த அழகிய பிரபல நடிகையா! வைரலாகும் குடும்ப புகைப்படம்!!

Summary:

அட. இது தெரியுமா? சிறுத்தை பட வில்லன் நடிகரின் மனைவி இந்த பிரபல நடிகையா! வைரலாகும் குடும்ப புகைப்படம்!!

கன்னட மொழியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் அவினாஷ். அதனைத் தொடர்ந்து அவர் பி.வாசு இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் ராமச்சந்திர ஆச்சாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

பின்னர் அவர் சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படத்தில் பாவுஜி என்ற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிலைநாட்டினார். அதனைத் தொடர்ந்து அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் அவினாஷ் மனைவி மாளவிகா. இவர் மாதவன் நடிப்பில் வெளிவந்த ஜேஜே படத்தில் ஹீரோயினின் சகோதரியாக நடித்துள்ளார். மேலும் அவர் ஆறு, ஆதி, கண்மணி என் காதலி, ஜெயம்கொண்டான், வந்தான் வென்றான் போன்ற படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் மாளவிகா சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார். அவினாஷ் மற்றும் மாளவிகா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement