உற்சாகத்தில் துள்ளிகுதிக்கும் சியான் விக்ரம்... ஆதித்த கரிகால சோழனுக்கு வெற்றி.!



Vikram Thanks to ManiRathnam and Fans

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அத்துடன் இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கில் ஹிட்டான பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு தெலுங்கு ரசிகர்கள் மற்றும் தமிழ்ரசிகர்களும் ட்விட்டரில் மோதி வருகின்றனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையை ஈட்டி வருகிறது. உலகளவில் இப்படம் 
ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்புக்காக நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், நன்றி என்ற வார்த்தையை 5 மொழிகளிலும் கூறிய விக்ரம், "பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் ஆதித்ய கரிகாலனிற்கு கிடைத்த ஆக்ரோஷமான கருத்துக்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுடைய படத்தை அனைவரும் கொண்டாடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தருணத்தில் நான் மணிரத்தினம் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.