சினிமா

என்னுடைய இடத்தில் அது நடந்தற்காக பெருமைப்படுகிறேன்… விக்ரம் பட நாயகி அதிரடி!......

Summary:

என்னுடைய இடத்தில் அது நடந்தற்காக பெருமைப்படுகிறேன்… விக்ரம் பட நாயகி அதிரடி!......

உலகநாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனை தவிர மக்கல் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளத்தோடு தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை யாராலும் மறந்திட முடியாது. அந்த படத்தில் நடிகர் சத்தியராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பழைய விக்ரம் படத்தின் முற்றிலும் மாறுபட்ட வெர்ஷனாக உருவாகியுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள புதிய விக்ரம்.

மேலும் அந்த விக்ரம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை லிஸ்சி லக்ஷ்மி, அவர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தது குறித்தும், தற்போது கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் விக்ரம் திரைப்படம் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,” நீண்ட வருடங்களுக்குப் பிறகு கமல் ‘விக்ரம்’ என்ற பெயரில் இன்னொரு படத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படம் அந்த படத்தின் கதையம்சங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. முதல் விக்ரம் படத்தின் நாயகிகளில் நானும் ஒருத்தியாக நடித்திருந்தேன்.

மேலும் தற்போது உருவாகியுள்ள விக்ரம் படத்தின் டப்பிங் வேலைகள் எனக்கு சொந்தமான லிஸ்ஸி லக்ஷ்மி ஸ்டுடியோவில் செய்யப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Advertisement