புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
விக்ரம் படப்பிடிப்பின் போது இதெல்லாம் நடந்ததா.. வெளியான அதிர்ச்சி வீடியோ.?
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் படங்கள் நடிக்க வேண்டும் என முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகிறார்கள். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படமே இதற்கு காரணம் என்றும் சொல்லலாம்.
'விக்ரம்' திரைப்படத்திற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் பேசப்படவில்லை.
இதுபோன்ற நிலையில், 'விக்ரம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான போது ரசிகர்களின் மத்தியில் பாராட்டப்பட்டு விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், சூர்யா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.
மேலும், 'விக்ரம்' திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசன் சண்டை காட்சிக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாரா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Goosebumps 🔥💥👌 Aandavarey#KamalHaasan #1YearsOfVikram pic.twitter.com/mYwxCweXp3
— 𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣 (@Ramhaasan7) May 15, 2023